இனந்தெரியாத தாவரங்கள் பெருமளவில் பருத்தித்துறை கடற்கரை யில் நேற்று காலை ஒதுங்கின. இதனால் மீனவர்
கள் தமது படகுகள், வலைகளைக் கொண்டு செல்வதில் பெரும் இடர் பாடுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ச்சி யாக மழை பெய்து வரும் நிலையில் இந்திய கரையோரப் பகுதிகளிலிருந்து இந்தத் தாவரங்கள் கடலலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியிருக் கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறை துறைமுகம் தொடக்கம் கிழக்குப் பகுதி வரை சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கு இந்தத் தாவ ரங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L