டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய வீட்டை வழங்கி வைத்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பரிசுச் சான்றிதழை பிரதமர் கையளித்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 2 கொம்பனி வீதிப் பகுதியிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
———–
Reported by : Sisil.L