அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதற்தடவையாக இன்று பாராளுமன்றத்தில் கூடியது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கு இந்த கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Reported by :Maria.S