பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு திட்டம்!

பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகருக்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருடர்கள் மற்றும் கொள்ளையர்களைத் தேடுவதற்கும் கைது செய்வதற்கும் மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸாரினால் நடமாடும் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *