நேட்டோவில் இணையும் சுவீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடியப் பிரதமர், இது குறித்த கேள்விக்கு பதிலளித்து கூறும்போது, நேட்டோவில் சேர சுவீடன் மற்றும் பின்லாந்து குறித்து உரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், கனடா நிச்சயமாக இரு நாடுகளுக்கும் ஆதரவை அளிக்கும் என்றும் கூறினார்.
Reported by : Sisil.L