நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து ,பொது மக்களின் வாழ்வாதாரம் கஷ்டத்துக்குள்ளான நிலையில் சுகாதார சேவையில் நிலவும் குறைபாடுகளை நீக்க வலியுறுத்தியும் , மருத்துவப் பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தியும் இன்று(23) திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள் எனப் பலரும் இணைந்து வைத்தியசாலை முன்றிலில் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில் சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் , நோயுற்றவர்களை காப்பாற்றுங்கள், சுகாதாரத்துக்கான பண ஒதுக்கீட்டில் கை வைக்காதே, குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் ,கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
———————–
Reported by : Anthonippillai .R