யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 24 பேர் பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.
நேற்று 20 ஆண்களும் இன்று 4 பெண்களும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 20 ஆண்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
4 பெண்களும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உள்ளடங்கலாக 28 பேர் இதுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலியில் யுவதிகளின் முகங்களை வௌிநாட்டு பெண்களின் நிர்வாண படங்களுடன் இணைத்து சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 28 ஆம் திகதி இரவு மோதல் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by :S.Kumara