நீண்ட வார விடுமுறையில் பலர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை சுகாதார அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அது மேலும் வளர்ச்சியடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
—————————–
Reported by : Sisil.L