தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கும் போது நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றார்.
நாடு முழுமையாக திறக்கப்படுமானால், நிலைமையை இன்னும் மோசமாக் கும். எனவே , நாட்டை படிப்படியாகத் திறப்பது மிகவும் பொருத்தமானது. அத்துடன் இதுவே பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் கொவிட் -19 தொற்று ஏற்படக்கூடிய ஆபத்தான காரணிகள் உள்ளனவா என்பதை நாம் கண்டறிய முடியும்.
தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் பலனை நாடு அனுபவித்து வருவதால், அடுத்த வாரத்திலிருந்து நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் பேசப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
Reported by : Sisil.L