நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண் ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 132 பேரில் 66 ஆண்களும், 66 பெண்களும் அடங்குகின்றனர். இதில் ஆண் ஒருவரும், பெண் இரு வரும் என மூவர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 18 ஆண்கள், 10 பெண்கள் என 28 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 101 பேர் 60 வயதுக்கு மேற் பட்டவர்களாவர். இதில் 47 ஆண்களும், 54 பெண்களும் அடங்குகின்றனர்.
————
Reported by : Sisil.L