நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தாது. ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவ நடவடிக்கையின் முடிவு அணுவாயுதங்களை பயன்படுத்துவதை தீர்மானிக்காது எனத் தெரிவித்துள்ள பெஸ்கொவ், எங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் அதனைப் பயன்படுத்துவோம் என்ற தெளிவான பாதுகாப்பு கருத்தினை கொண்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
.
தேசத்தின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் போது நாங்கள் நிச்சயமாக அணுவாயுதங்களைப் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை கசாப்புக்கடைக்காரன் என வர்ணித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யப் பேச்சாளர், இது அச்சம் தரும் கருத்து, அவமானப்படுத்தும் கருத்தும் கூட எனத் தெரிவித்துள்ளார்.
———————–
Reported by : Sisil.L