நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விசேட கலந்துரையாடல்

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.


இந்தக் கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்போது, வீட்டில் இருந்து பணியாற்றும் முறைமைக்கு அரச சேவையாளர்களை ஈடுபடுத்த முடிவெடுத்தால், அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.


இதேவேளை, பாடசாலைகளை இணைய வழி முறையில் நடத்த நிகழ்ந்தால், ஏற்படக் கூடிய இன்னல்களைக் குறைத்துக் கொண்டு அதனை முன்னெடுப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றது.


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இணையவழி ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இணையவழி முறைமையில் கற்பித்தலை மேற்கொள்வது குறித்து சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Reported  by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *