நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) காலை முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலையின் ஊழியர்களும் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திருகோணமலை பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 
ஊழியர்கள் இன்று காலை முதல் வைத்தியசாலைக்கு வருகை தந்த போதிலும், பணிகளுக்கு செல்லாமல் பதாதைகளை ஏந்திய வண்ணம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருகோணமலை கிண்ணியா தள வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் இன்று காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

தீவிர, அவசர சிகிச்சை பிரிவுகள் விசேட கிளினிக் பிரிவுகளைத் தவிர வேறு சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

லிந்துலை வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளர்கள் சேவைகளைப் பெற முடியாது சிரமப்பட்டனர். 

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *