அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் -குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்பும் குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.
கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.
அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் விஞ்ஞானிக்கு பலரும் இரங்கல்களைக் கூறி வருகின்றனர்.
———–
Reported by : Sisil.L