வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இலங்கை விமானப்படையின் புக்காரா விமானம் நடத்திய குண்டு வீச்சில் 21 மாணவர்களும் 18 பொது மக்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.
—————-