நல்லூர் திருவிழா இம்முறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கும்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உட்பிரகாரத்திலேயே திருவிழா நடத்துவதற்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக்கூறினார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகின்றது.இந்தப் பெருந்திருவிழாவில் பங்கேற்க சுகாதார வழிகாட்டுதல்களின்படி 100 பேருக்கு மாத்திரமே அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆலயத்தின் உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த
வருட ஆலய உற்சவத்தை திறம்பட செயற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *