மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் மூழ்கிய படகில் சிக்கி தவித்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஓமானின் சோகர் துறைமுகத்துக்கு சீனி ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக் காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி ஈரான் கடற்பகுதியில் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஈரான் கடற்படையினர் படகில் தவித்த 11 இந்திய மாலுமிகளை மீட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
Reported by : Sisil.L