விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்ததாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிணை கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்ததை அடுத்து, பிணை உத்தரவை நீதிபதி அறிவித்துள்ளார்.
(செய்தி பின்னணி)
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
Reported by :S.Kumara