தொற்றிலிருந்து நாடு விடுபடுவதற்கு பேதங்களை மறந்து செயற்படுவோம் : ஞானசார தேரர்

இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டில் பங்கேற்றேன் என்று  கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 
“நாங்கள் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வந்திருக்கின்றோம். தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரிந்த விடயம். இலங்கையில் மட்டுமல்ல  உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். அது சிங்களவராக இருக்கட்டும் தமிழராய் இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் ஒரு நேர உணவுக்குக்கூட வழியில்லாமல் உள்ளார்கள். இதேபோல் சிலருக்கு வேலையில்லாப் பிரச்சினை காணப்படுகின்றது. அத்துடன், இந்த நோய் தொற்றுக்கு உள்ளானோர் சிகிச்சை பெறுவதற்கு  அவதிப்படுகிறார்கள். எந்த இனத்தவராக இருந்தாலும் பிரச்சினையில்லை. அனைத்து இன மக்களும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக, பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதி முறையைப் போல இந்து மதத்தில் உள்ள ஆகம விதிமுறையை இணைத்து இந்தத் தொற்றில்  இருந்து நாடு விடுபட கடவுளிடம் வேண்டி ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம். தற்பொழுது பௌத்தம், இந்து, இஸ்லாம்  என்ற பேதங்களை மறந்து  அனைவரும் இணைந்து இந்தக் கொரோனா நோயிலிருந்து  விடுபடுவதற்காக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்” என்றார்.      

————–   

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *