தொற்றாளர்கள் அதிகரிப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவேண்டும்: சுகாதார அமைச்சு

நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மீளவும் கட்டுப்பாடுகளை இறுக்க மாக்க நேரிடும் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தினார். அவர் நேற்று ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
“திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை கலாசார ரீதியில் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையிலேயே கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
எனினும் அந்தத் தளர்வுகளையும் மீறி நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் எதிர்வரும் நாட்களில் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுமாயின் கடந்த மே மாதம் போன்று இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும்.

டெல்டா பிறழ்வானது வடக்கு, கிழக்கு, மேல், தென் மாகாணங் களில் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளமை புலப்படுகின்றது”  என்றார்.          
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *