இவ்வாரம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளின் பெறுபேறுகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
துரித அன்டி பொடி சோதனைகள் மற்றும் பிசிஆர் சோதனைகள் மூலம் சமூகத்தில் கொவிட் வைரஸ் எந்தளவுக்கு பரவியுள்ளது என்பதை முடிவுகள் காண்பிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.
Reported by : Sisil.L