இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2023 எசல திருவிழாக்களுக்கு, முன்னணி மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களான Swadeshi Industrial Works PLC நிறுவனத்தினால் ஒளியேற்றப்பட்டன. சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய எனும் கருப்பொருளின் கீழ் இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வுகள் 2023 ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 04ஆம் திகதி நிறைவடைந்தன. அத்துடன் சுதேசி நிறுவனம் தொடர்ச்சியாக 22ஆவது வருடமாக இந்த ‘ஆலோக பூஜா’ நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சொந்தமான நிறுவனம் என்ற வகையில், இவ்வாறான வருடாந்த ‘ஆலோக பூஜா’ போன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பதை கடமையாக கருதுவதாக, சுதேசி நிறுவனத்தின் தலைவி அமரி விஜேவர்தன தெரிவித்தார்.
அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதனையும் இது அடிப்படையாகக் கொண்டு, சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஒளியூட்டப்பட்டு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஓளியூட்டும் நிகழ்வுகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையான வண்ணமயமான கலாசாரப் போட்டிகளும் இடம்பெற்றன.சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ நிகழ்வுடன் இணைந்ததாக, கதிர்காமத்தில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலகத்தில் ‘சுதேசி கொஹொம்ப பேபி மாத்ரு சத்காரய’ எனும் நிகழ்ச்சியை சுதேசி நடத்தியது. இங்கு 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பராமரிப்புத் தயாரிப்புகளை சுதேசி கொஹொம்ப பேபி நன்கொடையாக வழங்கியது.
மகாவம்சத்தின் படி, புத்த பெருமான் தனது மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது தர்மத்தை போதிப்பதற்காக கதிர்காமம் கிஹிரி உயனவிற்கு விஜயம் செய்ததன் நினைவாக மகாநாக மன்னனால் கிரி வெஹெர கட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகச் செய்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் கதிர்காமம் தேவாலயம் துட்டகைமுனு மன்னரால் கட்டப்பட்டது. கதிர்காம கடவுள், இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் வழிபடுகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பழங்கால சுவரோவியங்கள், அதன் பெருமையை மீண்டும் கொண்டு வரும் வகையில் திருமதி அமரி விஜேவர்தனவினால் 2013 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டன.
1927 இல் களனி ரஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜேவர்தன லமாதெனியின் கொள்ளுப் பேத்தியே திருமதி அமரி விஜேவர்தன ஆவார்.அத்துடன், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலய, அலுத் நுவர தெடிமுண்ட தேவாலாயம், கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மகா சமன் தேவலயம், ரெதிகம ரிதி விஹாரை, லங்கா திலக ரஜ மாக விகாரை, தெரணியகல சமன் தேவாலயம், அம்மதுவ குடா கதரகம தேவலாயம், சங்கபலி ரஜ மகா விகாரை, கொலம்பகம ரஜ மாக விகாரை, தம்பதெனிய ரஜா மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.
100% முழுமையான உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.
Reported by :S.Kumara