கொவிட் பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துகள் காரணமாக அதிகளவு மக்கள் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுகின்றனர். இவ்வைத்தியசாலையின் சுமார் 250 சுகாதார ஊழியர்கள் ஏற்கனவே கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தாதியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L