தெற்கு அதிவேக வீதியின் பின்னதூவ மற்றும் இமதூவ பகுதிகளுக்கு இடையிலான 102ஆவது கிலோமீட்டர் பகுதியை அண்மித்த பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில். கொட்டாவயிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதூவ நுழைவாயிலின் ஊடாக வெளியேற முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வௌியேறும் வாகனங்கள் காலி, தெனியாய – மாதம்பே வீதியூடாக பயணித்து மீண்டும் இமதூவ நுழைவாயிலினூடாக அதிவேக வீதிக்கு பயணிக்க முடியும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொட்டாவ நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இமதூவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி காலி தெனியாய – மாதம்பே வீதியில் பயணித்து பின்னதூவ நுழைவாயிலில் இருந்து மீண்டும் அதிவேக வீதியில் நுழைய முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் நேற்று(11) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 7 பேர் காயமடைந்தனர்.
இதன்போது காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
அதிவேக வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
Repo