தென்கிழக்குப் பல்கலையில் 37 மாணவர்களுக்கு கொவிட் தொற்று

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.


 கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம் இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  சுகுணன் தெரிவித்தார்.
அதன்படி, 37 மாணவர்களும் சிகிச்சைக்காக அட்டாளைச்சேனை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *