உடபுசல்லாவையைச் சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை 9 30 மணியளவில் ராகலையில் மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா , ஹட்டன், கினிகத்தனை,அவிசாவளை வழியாக கொழும்பு காலிமுகத் திடலை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந் நடைபயணத்தில் வழி நெடுகிலும் மக்கள் சத்தியசீலனை உற்சாகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
——–
Reported by : Sisil.L