வெளிநாட்டு விவாகரத்துகளைப் பதிவு செய்தல், திருமணத்தை இரத்து செய்தல் அல்லது சட்டத்துறை பிரிவினையை அங்கீகரிப்பது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான சட்டமூலங்களை வரைஞர்கள் தற்போது தயாரித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை பதிவு செய்வதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள், திருமணப் பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், வெளிநாட்டு திருமணப் பதிவு, திருமணத்தை ரத்து செய்தல் அல்லது சட்டத்துறை பிரிப்பு தொடர்பான விதிகள் இதில் இல்லை.
இதன்மூலம், மேற்படி சட்டத்தைத் திருத்துவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்து வதற்கும் நீதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், இந்தச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனையடுத்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
—————
Reported by : Sisil.L