முத்துராஜா யானையை ஏற்றிய ரஷ்ய விசேட சரக்கு விமானம் இன்று(02) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்தே விமானம் தாய்லாந்து நோக்கி புறப்பட்டது.
முத்துராஜா யானை 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அதற்கிணங்க, சுமார் 22 வருடங்களாக முத்துராஜா யானை அளுத்கம கந்தே விஹாரையின் பொறுப்பிலிருந்தது.
அழகிய தந்தங்களை கொண்ட முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அதனை மீளவும் தமது நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய, தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானையின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவ குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்திருந்தது.
Reported by :S.Kumara