தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.
தாமரைக் கோபுரத்தை திறக்கும் முதல் கட்டம் இதுவாகும்.
இரண்டாம் கட்ட செயற்பாடுகள் இன்னும் 2 மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் கட்ட திறப்பு விழாவை அடுத்த வருடம் மார்ச் மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோபுரத்தின் கீழ் பகுதி 3 தளங்களைக் கொண்டுள்ளதுடன் குறித்த பகுதியில் டிஜிட்டல் திரையரங்கு, மாநாட்டு அரங்கம், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் திருமண நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஐந்தாவது மாடியில் சுழலும் ஹோட்டல் அமைந்துள்ளது.
ஆறாவது மாடியில் 6 சொகுசு அறைகள் கட்டப்பட்டுள்ளதுடன் ஏழாவது மாடி பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொழும்பு தாமரை கோபுர வளாகத்திற்கு நேற்று(14) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Reported by :Maria.S