தற்போதைய அரசு மேலும் 05 வருடங்கள் ஆட்சியிலிருக்க அனுமதிக்க முடியாது: ஹர்ஷ டி சில்வா எம்.பி.

தற்போதைய அரசாங்கம் பொது மக்களை ஏமாற்றி மேலும் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்க முயன்றால், அது  ஒருபோதும் நடக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு கிடைக்கும் வரை மக்கள் போராடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஹோமாகமவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது கொள்கைகளை செயற்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *