தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி முன்வைத்த கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாமையாலும் , நீண்டகாலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக கட்சியொன்று செயற்பட்டு வருவதாலும், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் பி.பி.சி.குலரத்னவினால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Reported :S.Kumara