தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன் (வயது 77) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
நெல்லைக் கண்ணன் 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.
குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். நெல்லைக் கண்ணனின் முதல் மகன் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
நெல்லைக் கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் நெல்லைக் கண்ணன் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
————–
reported by :Maria.S