தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தை பேணும் வகையில் இந்த தடை விதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை வௌியில் வைத்துவிட்டு செல்லும் வகையில், பாதுகாப்பான இட வசதிகளை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்புத் துறையினரை சேவையில் ஈடுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கையடக்க தொலைபேசி பாவனையினால் மக்களின் கவனம் சிதறடிக்கப்படுவதாகும் ஆலயங்களில் படங்கள் எடுப்பது ஆகம விதிகளுக்கு முரணானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,  வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என கூறப்பட்டுள்ளது. 

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *