விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமித்தா அபேரத்னவிற்கு இன்று(12) பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று(12) உத்தரவிட்டார்.
கடந்த 07ஆம் திகதி பத்தரமுல்லை – தியத்த உயன பகுதியில் வைத்து, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தமித்தா அபேரத்ன கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் தமித்தா அபேரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria.S