சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘X’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது.
அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (Logo) ‘X’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டுள்ளது.
தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான Space X மற்றும் கார் உற்பத்தி நிறுவனமான Tesla ஆகியவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை கடந்த ஆண்டு கையப்படுத்தினார்.
ஏற்கெனவே, ‘X’ என்ற மாபெரும் சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி வந்த அவா், ட்விட்டரின் பெயரையும், இலச்சினையையும் மாற்றுவதாக நேற்று (24) அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டா் அலுவகத்தில் ‘X’ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டுள்ளாா்.
தனது ட்விட்டா் கணக்கிலுள்ள தன்னைப் பற்றிய அறிமுகப் பகுதியில், பழைய இலச்சினைக்கு பதில் புதிய இலச்சினையை பதிவு செய்துள்ள மஸ்க், ஊடகத்தின் பெயரையும் ‘X.com’ என்று மாற்றியுள்ளாா்.
ட்விட்டா் பதிவுகள் அனைத்தும் ‘ட்வீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தன. அவை இனி ‘X’கள் என்று அழைக்கப்படும் என்று மஸ்க் கூறியுள்ளாா்.
நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த ட்விட்டா் இலச்சினையும், பெயரும் மாற்றப்படுவது குறித்து ஏராளமான சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் தங்களது அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனா்.
Reported by:N.sameera