நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியைச் சமாளிக்க மூன்று வெளிநாடுகளிடம் இருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இத்தகைய கடன்களைப் பெற கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சர வைக்கும் அறிவிக்கப்பட்டது. 1400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் இறுதி அமைச்சரவையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
——————
Reported by : Sisil.L