டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்களை இறக்குவது தடைப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் கொள்கலன்கள் சிக்கியிருப்பதை செய்திகளில் பார்த்ததாகவும், இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விடம் கேட்டதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்படி, டொலர் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கினால் உடனடியாக மத்திய வங்கிக்கு அறிவிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன், அவ்வாறான நெருக்கடி ஒருபோதும் நிகழாதிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L