நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதால் கட்டுமானத் தொழிலில் உள்ள பலர் கடும் சிரமத்துக்குள்ளாகி யுள்ளனர் என சீமெந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சீமெந்து ஒரு மூடையின் கட்டுப்பாட்டு விலை 950 ரூபா என்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1400 – 1500 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த சீமெந்து பற்றாக்குறையால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேசன்மார் மற்றும் உதவியாளர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர்.
நாட்டில் சீமெந்து பற்றாக்குறைக்குக் காரணம் சீமெந்து இறக்குமதிக்குத் தேவையான டொலர்கள் இல்லாததே என்று நாட்டின் முன்னணி சீமெந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்ளூர் சீமெந்து தேவையில் 60% இலங்கையிலிருந்தும், மீதமுள்ள 40% இறக்குமதியிலிருந்தும் பெறப்படுகிறது.
டொலர் இல்லாமை காரணமாக பல நிறுவனங்கள் சீமெந்து இறக்குமதியை நிறுத்தியதால் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
————————–
Reported by : Sisil.L