டெல்டா வைரஸ் சமூகத்துக்குள் பரவியுள்ளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஐவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மருத்துவர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
மாதிரிகளின் மரபணு வரிசை முறையை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் நாங்கள் தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குள் வைரஸ் பரவலாம் என்ற அச்சம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
——————————-
Reported by : Sisil.L