இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். அதே வேளை, டெல்டா வைரஸ் மாத்திரமின்றி ஏனைய புதிய நிலைமாறிய வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துகளும் காணப்படுகின்றன.” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளப் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும். மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் நிலைமை மிக
மோசமாகி விடும்” என்றார்.
———-
Reported by : Sisil.L