இலங்கையின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.தற்போது ஆரம்பமாகியுள்ள பருவப்பெயர்ச்சி மழையுடன்டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி,ஹம்பாந்தோட்டை ஆகிய 10மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இவற்றில் மேல் மாகாணத்திலேயே பெருமளவானோர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு
பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் என டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L