தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் நேற்று காலமானார்.1936ஆம் ஆண்டு பிறந்த அவர், தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்.1994ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பிரதானமொழிபெயர்ப்பாளராக செயல்பட்டிருந்தார்.இறுதிப் போர் காலத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். கோப்பாய்முதியோர் இல்லத்தில் வசித்து வந்த அவர் நேற்று காலமானார்.ஜோர்ஜ் மாஸ்ரரின் மறைவுக்கு நோர்வே அரசின் சமாதானத் தூதுவராக செயல்பட்ட எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சமாதான பேச்சுக்களின்போது, நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்காக சிறந்த
மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் மாஸ்டர் பணியாற்றினார். அவர் மிகுந்த
தமிழ் தேசப்பற்றாளர். சமாதானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். அவ
ரின் ஆத்மா சாந்தியடையட்டும்”, என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவி
ட்டுள்ளார்.
——————————–
Reported by : Sisil.L