ஜெரொம் புதாவை 22 நாட்களாக காணவில்லை

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 நாட்களுக்கு முன்னர் புறப்பட்ட ‘ஜெரொம் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என படகில் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு, வெல்லவீதிய, தொடுவாவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் நால்வர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

கடலுக்கு சென்றவர்களின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

“எங்கள் தந்தை கடலுக்குச் சென்று இன்று 20 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் எந்தச் செய்தியும் இல்லை. அவர்கள் சிரமத்தில் இருந்தால் அவர்களைக் காப்பாற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். எனது தந்தையையும் மற்றவர்களையும் உயிருடன் கரைக்கு கொண்டு வந்து தாருங்கள்.”

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *