ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

2 நாட்கள் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸுக்கு பயணமாகவுள்ளார். 

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Bongbong Marcos மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *