ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிச்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
டோக்கியோவிலிருந்து வடகிழக்கே 297 கி.மீ. தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரைப் பகுதி அருகே நேற்றிரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் தற்போது அங்கு 20 லட்சம் வீடுகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L