ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தின் பின் பிரிட்டன், அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹோல்டன் மற்றும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.


இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின்  டுவிட்டர் பதிவுகள் மூலம் இது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


“அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அழைப்புகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து எதிர்பார்த்துள்ளது. அமைதியான போராட்டத்துக்கான உரிமை உட்பட ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துங்கள்” என்று ஹோல்டனின் டுவிட் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி, ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா இப்போது புதிய அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதியம் உட்பட நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வேலை செய்ய ஊக்குவிக்கிறது. இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட் செய்துள்ளார்.
————–

Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *