‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் பாடி புகழ் பெற்ற ஜொஹானி டி சில்வா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு ஜொஹானி மெனிக்கே மகே ஹித்தே உட்பட பல பாடல்களைப் பாடியுள்ளார். ஜொஹானியின் பாடல்களைக் கேட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி கைதட்டி மகிழ்ந்துள்ளதோடு அவரை வாழ்த்தியுள்ளனர்.
மெனிக்கே மகே ஹித்தே பாடல் பாடி புகழ் பெற்ற ஜொஹானி இந்தியாவுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி விட்டு நாடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் அவர் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
———–
Reported by : Sisil.L