ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
—————–
Reported by : Sisil.L