ஜனவரியில் 75,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

இந்த ஆண்டு ஜனவரியில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,000ஐ தாண்டியுள்ளது.

 
ஜனவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76,538 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 11,028 பேரும், உக்ரெய்னிலிருந்து 7,427 பேரும் வந்துள்ளனர். அந்த 29 நாட்களில், இங்கிலாந்திலிருந்து 6,929 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 4,902 பேரும், பிரான்சிலிருந்து 3,337 பேரும் வந்துள்ளனர்.

 
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய அறிக்கையின்படி, போலந்து, அவுஸ்திரேலியா, மாலைதீவு மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.


கடந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். அந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்தனர். இந்த ஆண்டு 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
அதனை அதிகரிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 
கொவிட் ஒமிக்ரோன் பரவியதன் மூலம், உலகளாவிய சுற்றுலாத்துறை மீண்டும் தடைப்பட்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையின் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியால், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை மீது கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
———————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *