1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தில ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தைத் தொடர்ந்து இன்றுவரை கதிரியக்க ஆபத்தை கொண்டுள்ள பகுதியாக செர்னோபில் காணப்படுகின்ற நிலையிலேயே ரஷ்யப் படையினர் செர்னோபிலை கைப்பற்றியுள்ளனர்.
செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால் பெரும் ஆபத்து ஏற்படலாம் என செபீல்ட் பல்கலைகழகத்தின் அணுசக்தி பொருட்கள் நிபுணர் பேராசிரியர் கிலயர் கோர்க்கில் தெரிவித்துள்ளார்.
இது வெடி மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை கட்டுப்படுத்தும் பல வசதிகள் உள்ளன.1986 ஆம் ஆண்டு விபத்தின் பின்னர் அணுஉலையைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குவிமாடமும் காணப்படுகின்றது.
இந்தக் கட்டிடங்கள் கதிரியக்கப் பொருட்களை உள்ளேயே வைத்திருக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் அவை போர்ச்சூழலில் செயற்படும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டவை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L